செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (08:14 IST)

நடிகராக 25 ஆவது படம்… மீண்டும் தயாரிப்பாளராகும் ஜி வி பிரகாஷ்!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார்.

இந்த 25 ஆவது படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜி வி பிரகாஷ், சில ஆண்டுகளுக்கு முன்னர் மதயானைக் கூட்டம் என்ற திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாக அந்த படம் விவாதங்களை உருவாக்கினாலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. அதையடுத்து இப்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்குகிறார்.