ஜி வி பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டியர் படத்தின் ஷூட்டிங் நிறைவு!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி வி பிரகாஷ் குமார் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் நடிகரானார். ஆரம்பத்தில் 18+ பிளஸ் படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்தார்.
ஆனால் அவரின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தால், இப்போது நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார். இந்நிலையில் இப்போது அவர் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து டியர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்க, நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரங்களில் இளவரசு, காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ள நிலையில் இப்போது படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.