நவம்பருக்கு தள்ளிப்போன வீரசிவாஜி
நவம்பருக்கு தள்ளிப்போன வீரசிவாஜி
விக்ரம் பிரபு, ஷாம்லி, ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வீரசிவாஜி.
இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.
படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்தனர். செப்டம்பர் 23 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்ச்சியாக படங்கள் வெளியாவதால் தற்போது, பட வெளியீட்டை நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். அக்டோபர் இறுதியில் தேதியை அறிவிக்க உள்ளனர்.