வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (15:55 IST)

விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல் - 'சர்கார்' படத்தின் முதல் விமர்சனம்

தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம்  நவம்பர் 6ம் தேதி (நாளை) வெளியாகிறது, இதனால் தளபதி  ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். பேனர்கள், போஸ்டர்களால் தமிழகத்தில் சர்கார் ஜுரத்தை ரசிகர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்.  

இந்நிலையில் UAE சென்சார் போர்டில் இருக்கும் யுமைர் சந்து என்பவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். 
 
அதில் அவர் கூறுகையில், "சர்கார் படத்தின் முதல் பாதி செம்ம மாஸ். விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல். I am a Corporate Criminal ! - வசனம் தெறிக்கிறது. சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் மாஸ். ஏ.ஆர். ரகுமான் சிறப்பாக இசையமைத்துள்ளார். முருகதாஸ் சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். நிச்சயமாக சர்கார் படத்தை பார்க்கலாம். மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும், விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்து படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள்"  இவ்வாறு அவர்  பதிவிட்டு உள்ளார்.