செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (19:34 IST)

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக படம் - தீபாவளி அன்று அறிவிப்பு

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக சகல வழிகளிலும் நிதி திரட்டி வருகின்றனர். முன்னணி நடிகர்கள் பணம் வாங்காமல் ஒரு படத்தில் நடிப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். 


 

 
இந்தப் படத்தை முத்தையா இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அவர் சூர்யா படத்தை இயக்குவதில் தீவிரமாக உள்ளார். ஆகவே, இலவச படம் என்னவாயிற்று என்று விஷாலிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர்.
 
அதற்கு பதிலளித்த விஷால், முன்னணி நடிகர்களை வைத்து ஒரு படம் எடுத்து, அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட உள்ளோம். அது தொடர்பான முக்கிய அறிவிப்பை தீபாவளிக்கு வெளியிட உள்ளோம் என்றார்.
 
தீபாவளி அன்று, படத்தில் யார் நடிக்கிறார்கள்? யார் இயக்குகிறார்? என்ற விவரங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.