செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (14:19 IST)

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண் நடிகையா...?

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண் நடிகர் நடிக்கமாட்டார் என அத்திரைப்படங்களின் நிர்வாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான கதாபாத்திர தேர்வு பொறுப்பில் இருக்கும் பார்பரா ப்ரோக்கலி, "பாண்ட் ஒரு ஆண். அது ஒரு ஆண் கதாபாத்திரம். ஒரு ஆணை கொண்டு அந்த கதாப்பத்திரம் உருவாக்கப்பட்டது; எனவே அது ஆண் கதாபாத்திரமாகவே இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
 
"அது தவறில்லை நாம் ஒரு ஆண் கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்ற வேண்டிய அவசியமில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தற்போது ஜேம்ஸ் பாண்டாக நடித்துவரும் டேனியல் கிரேக்கின் அடுத்த படம் 2020ஆம் ஆண்டு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது 007 வரிசையில் கடைசி படமாக இருக்கும்.
 
குழப்பமான டிவிட்டர் பதிவு ஒன்றிற்கு பிறகு இட்ரிஸ் எல்பா என்னும் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று வதந்திகள் பரவின.
இந்த பாத்திரத்தில் பெண் ஒருவர் நடிக்க முடியுமா எனவும் சிலர் ஆச்சரிய கேள்விகளை எழுப்பி வந்தனர்.
 
"கடந்த வருடம் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண் ஒருவர் நடிக்கும் காலம் ஒரு நாள் வரும்" என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
58 வயதான ப்ரோக்கலி, "பெண் ஜேம்ஸ் பாண்டை உருவாக்குவது குறித்து பல்வேறு விதமாக பேசி வருவதற்கு பதிலாக அதிகமான பெண் கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும் மற்றும் பெண் கதாபத்திரங்கள் பொருந்துகிற மாதிரியான கதைகளை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் பாண்ட் கதாபத்திரம் காலப்போக்கில் மாறி வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
"நான் எனது பங்கை ஆற்ற முயன்றேன், குறிப்பாக டேனியல் கிரேக் படங்களில் பெண்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்பதில் தற்காலத்திற்கேற்றார்


போலவே கதைகள் அமைக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் "இந்த கதை 1950களில் எழுதப்பட்டது என்பதால் ரகசிய துப்பறிவாளர்களின் டிஎன்ஏவில் இருக்கும் சில விஷயங்கள் எப்போதும் மாறவே மாறாது" என்று தெரிவித்துள்ளார்.
 
பாண்ட் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ப்ரோக்கலியின் தந்தை 'கப்பி', முந்தைய காலக்கட்டங்களில் சினிமாத் துறையில் பெண்கள் பணிபுரியவும், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
 
மேலும் "அடுத்த பாண்ட் திரைப்படத்தில் பெண் கதாசிரியரும், இயக்குநரும் வர வேண்டும்" என்று விரும்புவதாகவும் ப்ரோக்கலி தெரிவித்தார்.
 
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் 4ஆம் தேதி தொடங்கும் என்றும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2020ஆம் ஆண்டு வெளிவரும் ஜேம்ஸ் பாண்டின் திரைப்படத்தை கேரி ஜோஜி ஃபுக்குனாகா இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டது பின் கருத்துகள் ஒத்துப்போகாமையால், பிரிட்டனை சேர்ந்த டேனி பாயில் அத்திரைப்படத்தை இயக்குகிறார்.
கடைசியாக 2015ஆம் ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் வெளிவந்தது.
முன்னதாக க்ரேகின் மனைவியான நடிகை ரேச்செல் வேயிஸ், "பாண்ட் கதாபாத்திரத்தில் பெண் ஒருவர் நடிப்பதில் எந்த விருப்பமும் இல்லை; பெண்கள் அவர்களுக்கான தனித்துவமான கதைகளை உருவாக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.