புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:40 IST)

இரண்டு டோஸ் போட்டும் கொரோனா வந்துவிட்டது! இயக்குனர் புலம்பல்

பாலிவுட் இயக்குனர் பரா கான் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை வெளிப்படுத்தி உள்ளார்.

பாலிவுட் முன்னணி நடன இயக்குனர், இயக்குனர் என பன் முகத்திறமை கொண்டவர் இயக்குனர் பரா கான். இவர் ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் மற்றும் ஹேப்பி நியு இயர் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பூசிகளைக் கொண்ட பின்னரும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ’இரண்டு டோஸ்களையும் நான் செலுத்திக் கொண்டேன். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுடன்தான் பழகினேன். ஆனால் என்னை கொரோனா தொற்றி விட்டது. வினோதமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.