திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (17:14 IST)

ரஜினி நடித்துள்ள "வேட்டையன்" திரைப்படத்துக்கு ஒரு டன் மலர்களை தூவி ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் இன்று  உலகம் முழுவதும் வெளியானது.
திருச்சியில் பல்வேறு தியேட்டர்களில் வெளியானதையடுத்து ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 
இதை முன்னிட்டு திருச்சி எல். ஏ.மாரிஸ் திரையரங்கில் இன்று 
திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர்  மன்ற மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன்  தலைமையில் மாவட்ட செயலாளர் எம். கலில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பிரம்மாண்டமான வேட்டையன் பிளக்ஸ் பேனருக்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஒரு டன் மலர்களை தூவி ரசிகர்கள் கொண்டாடினர்.
 
அப்போது ஆரவாரத்துடன்  ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.