செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (14:30 IST)

ரசிகர்கள் கையெழுத்தோடு விண்ணுக்கு பலூன் அனுப்பிய சூர்யா!

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் இன்று இரவு ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் உச்ச கட்டமாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களின் கையெழுத்தை அனுப்புமாறு வீடியோ ஒன்றின் மூலம் சூர்யா கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் சூர்யாவுக்கு தங்களுடைய ஆட்டோகிராப்பை அனுப்பினார்கள்
 
இதனை அடுத்து இந்த கையெழுத்துக்கள் அனைத்தையும் ஒரு ராட்சத பலூனில் ஓட்டி அந்த பலூன் தற்போது விண்ணுக்கு அனுப்பிய வீடியோவை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் இன்று ரிலீசாக உள்ளதை அடுத்து அந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான புதிய சப்ஸ்கிரைபர்கள் அமேசான் பிரைமுக்கு இந்த ஒரே ஒரு படத்தால் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஓடிடி வரலாற்றில் மிக அதிக வசூல் செய்யும் திரைப்படமாக சூரரைப்போற்று படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது