வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 மார்ச் 2021 (15:47 IST)

எஸ்.பி. ஜனநாதனுக்கு…ரத்த உறைவை நீக்கும் முயற்சி… பிரபல இயக்குநர் டுவீட்

பிரபல இயக்குநர் ஜனநாதனுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள ரத்த உறைவை நீக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும்  அவர் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் இயக்குநர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

இயற்கை பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.பி. ஜனநாதன். இவருக்குத் தற்போது திடீரென்று

உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில்

அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனநாதன் குறித்துப் பல வதந்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து இயக்குநரும் பேச்சாளருமான கரு. பழனியப்பன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜனநாதனுக்கு தோழர் ஜனநாதனுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெறுகிறது. மரு.ரமாநரசிம்மனுடன் நரம்பியல் நிபுணர்கள் மரு.சீனிவாசன் மற்றும் மரு.முருகன், தோழர்.ஜனாவின் மூளைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் ரத்த உறைவை நீக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.நலம் பெறுங்கள் தோழர். வேலை நிறைய இருக்கிறது. எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாதன்  விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

ஏற்கனவே இப்படத்தின் டீசர், டிரைலர் ரிலீசாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் எஸ்.பி,ஜன்நாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சினிமாவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.