செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (17:00 IST)

விஜய்யுடன் செல்பி எடுத்த பிரபல நடிகை

vijay - valaralakshmi
நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகை செல்ஃபி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது,  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில்ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில்,  விஜய்யுடன் சர்க்கார் என்ற படத்தில் நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார் அவருடன் விமானத்தில் செல்ஃபி எடுத்துள்ளார்.

வாரிசு பட ஷூட்டிங் மீண்டும் இன்று முதல் தொடங்கவுள்ளதால் இதில் கலந்துகொள்ள விஜய் ஐதராபாத்திற்கு விமானத்தில் கிளம்பினார். அப்போது,  வரலட்சுமி சரத்குமாரும் அவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அப்போது, விஜய்யுடன் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இப்புகைப்படத்தை அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.