வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (17:03 IST)

பிறந்தநாளில் பிறந்தமேனியுடன் புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர் !

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் மிலிந்த் சோமன். இவர் பையா, பச்சைக் கிளி முத்துச்சரம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் தனது 55 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது காதல் மனைவி அங்கிதாவுடன் கோவாவுக்குச் சென்றுள்ளார்.

அங்கு தனது பிறந்தமேனியுடன் இருக்கும் புகைப்படத்தை  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ’’ஹேப்பி பர்த்தே டு மீ’’ என்று தனக்குத்தானே பதிவிட்டு, இப்புகைப்படத்தை எடுத்த எனது மனைவிக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர் தன்னைவிட வயதில் குறைந்த 29வயது அங்கிதா என்ற பெண்ணை மணந்துகொண்டது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.