வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (19:11 IST)

'விஜய்68' படத்தில் இணைந்த பிரபல நடிகர்

venkat prabhu,yugendran
லோகேஷ்  இயக்கத்தில், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லியோ. இப்படம் வசூல் சாதனை படைத்த நிலையில், விஜய்யின் அடுத்த படம் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எனவே தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும்  ’தளபதி 68’. இப்பட ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்தப் படத்தில்  விஜய்யுடன் இணைந்து, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, விடிவி கணேஷ்,  வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய்ராஜ் உள்ளிட்டோர்  நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்கு சித்தார்த் மணி ஒளிப்பதிவு, வெங்கட்ராஜ் எடிட்டிங் மற்றும் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய்68 படத்தில் யுவன் இசையமைப்பில் மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை  T Series கைப்பற்றியது.

இந்த நிலையில் தளபதி68 படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளார். அதாவது, பிரபல நடிகரும், பாடகருமான யுகேந்திரன் வாசுதேன் இப்படத்தில்   இணைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் இப்போது பல ஆண்டுகள் கழித்து யுகேந்திரன் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் யுகேந்திரன் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள யுகேந்திரன், வெங்கட்பிரபுக்கு நன்றி கூறியுதுடன், இது தனக்கு ஸ்பெஷலானது என்று தெரிவித்துள்ளார்.