இலங்கை பெண் போராளியாக சமந்தா? – ஃபேமிலிமேன் டிரைலர் சர்ச்சை!
சமந்தா நடித்துள்ள புதிய வெப் சிரிஸான ஃபேமிலிமேன் தொடரில் இலங்களை தமிழ் போராளிகள் சம்பந்தப்பட்ட காட்சி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியில் உருவாக்கப்பட்டு அமேசான் ப்ரைமில் 2019ல் வெளியான வெப்சிரிஸ் ஃபேமிலிமேன். ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ள தீவிரவாதம் மற்றும் புலனாய்வை மையமாக கொண்ட இந்த வெப் சிரிஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதன் இரண்டாம் சீசன் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக இரண்டாம் சீசன் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது. இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இரண்டாம் சீசன் பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் இன்று அதன் டிரைலர் வெளியாகியுள்ளது.
இதில் சென்னையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பது போலவும் அதை புலனாய்வு செய்ய மனோஜ் பாஜ்பாய் வருவது போலவும் காட்டப்படுகின்றன. மேலும் சமந்தா இதில் பெண் தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவதும், அவர் இலங்கை தமிழில் பேசுவதும் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.