திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (15:02 IST)

நஸ்ரியாவின் அந்த குணம் தான் துரத்தி துரத்தி காதலிக்க வைத்தது - பகத் பாசில்!

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து உச்ச நடிகைகளாகவும் இளைஞர்களின் கனவுகன்னியாகவும் வலம் வந்த நயன்தாரா, அமலா பால், சாய்பல்லவி போன்றவர்களை தொடர்ந்து முக்கிய இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா.

தமிழில் நேரம் , ராஜா ராணி போன்ற படங்களில் கியூட்டான எஸ்பிரேஷன்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். இதற்கிடையில் மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் நஸ்ரியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். இந்நிலையில் நஸ்ரியா உடனான காதல் குறித்து முதன்முறையாக கூறிய கணவர் பகத் பாசில் " பெங்களூரு டேய்ஸ் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது நஸ்ரியாவை சந்தித்தேன். முதல் சந்திப்பில் அவர் மீது ஒரு விதமான ஈர்ப்பு  வந்தது. காரணம், அதற்கு முன் வரை யார் என்னை பார்த்தாலும், அணுகினாலும் என் திறமை மற்றும் வெற்றியை கண்டு ஜால்ரா தட்டுவார்கள்.

ஆனால், நஸ்ரியா என்னை முதலில் பார்த்தபோது எந்த வித ஓவர் ரியாக்ஷனும் இல்லாமல் நானும் ஒரு சாதாரண மனுஷர் போல் எல்லோரிடமும் பழகுவது போன்று தான் என்னிடமும் பழகினார். அதுவே பின்னர் காதலாக மாறியது. இருந்தும் என்னுடைய காதலை அவரிடம் சொல்லமுடியாமல் தவித்தேன். பின்னர் ஒருநாள் நஸ்ரியாவே என்னிடம் வந்து வெளியே செல்லலாமா..? என கேட்டு என்னை சிலிர்க்க வைத்தார். பின்னர் இருவரது பெற்றோரும் பச்சைக்கொண்டி காட்ட எங்கள் கல்யாணம் நடந்தது என கூறினார். பஹத் பாசில் நஸ்ரியாவை விட 12 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தது.