சென்சாருக்கு சென்று வந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்!
சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது.
சூர்யாவின் 40 ஆவது படமான எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது முடிந்துள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க மற்ற கதாபாத்திரங்களில் ராதிகா மற்றும் வினய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் எலலா பணிகளும் முடிந்து பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போதுள்ள சூழலில் பெரிய படமான எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை. ஆனாலும் படத்தை சென்சாருக்கு அனுப்பி சான்றிதழை பெற்றுள்ளது சன் பிக்சர்ஸ். படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வாங்கியுள்ளதாம். படத்தின் ரிலீஸ் தேதியே உறுதியாகாத நிலையில் படத்தை இப்போதே சென்ஸார் வாங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.