1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (10:46 IST)

6 வருஷம் இதுக்காக காத்திருந்தேன்... காதலியை கரம் பிடிக்கும் எருமசாணி விஜய்!

காதலியை கரம் பிடிக்கிறார் எருமசாணி விஜய்!
 
எருமைச்சாணி  விஜய், ஹரிஜா என்றால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு தெரியாமல் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் யூடியூபில் பிரபலம்.  இவர்களது குரும்பப்பட வீடியோக்கள் யதார்த்தமான காமெடி கொண்டு  லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. அதை வைத்து மீம்ஸ் கியேட்டர்கள் கன்டென்ட் போட்டது அவர்களது வீடியோக்களுக்கு மேலும் வியூஸ் அதிகரித்தது. 
 
அதன் பின்னர் ஹரிஜா தனது கல்லூரி சீனியர் அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு தனியாக யூடியூப் ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் விஜய் தனது நீண்ட நாள் காதலி நக்ஷத்திரா மூர்த்தி என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இருவரும் திருமண வேளைகளில் பிசியாக இருந்து வருகிறார்கள். நக்ஷத்திரா விஜய்யுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இதற்காக 6 வருடம் காத்திருந்ததாக கூறியுள்ளார். 
 
என்பதும் அவர்களுடைய ஒவ்வொரு மீம்ஸ் வீடியோக்களும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கொண்டது என்பதும் அந்த சேனல் தற்போது முன்னணி சேனல்கள் ஒன்றாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.