பிரபல நடிகையின் வீட்டில் நுழைந்து…பொருட்களை உடைந்த போதை கும்பல்!
பிரபல டிவி நடிகையின் வீட்டிற்குள் நுழைந்த போதை கும்பல் அங்குள்ள பொருட்களை உடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள தொலைக்காட்சியில் நடித்துவருபவர் நடிகை அர்ட்ரா தாஸ். இவர் பிரபலமான தொடர்களில் நடித்து கேரள மக்களிடம் பிரபலமானவர்.
இந்நிலையில் திருச்சூரில் உள்ள பட்டிப்பரம்பு என்ற பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த சிலர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தனர். நடிகையின் தாயை அடித்துக் காயம் செய்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நடந்தபோது, நடிகை அர்ட்ரா தாமஸ் தனது தந்தையும் வெளியே சென்றிருந்தால் தப்பினார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.