வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (14:59 IST)

மறுபடியும் முதல்ல இருந்தா ? – மீண்டும் ரிலீஸ் தேதி மாறும் எனை நோக்கி பாயும் தோட்டா !

ஒருவழியாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் மீண்டும் தள்ளிப்போக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதுவரைப் பலமுறை ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு கவுதம் மேனனுக்கு இருக்கும் நிதிப் பிரச்சனைகளே காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் தனுஷும் இந்தப் படத்தைக் கண்டுகொள்ளாமல் வேறு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் ஒருவழியாக கடன் தொல்லைகளை சரிகட்டிவிட்டு அடுத்தமாதம் செப்டம்பர் 6 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னோட்டமாக படத்தின் டிரைலரும் வெளியானது.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு பைனான்சியர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மீண்டும் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது. ஒருவேளை அப்படித் தள்ளிப்போனால் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் அசுரன் படத்தோடு மோத வேண்டிய சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.