முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினிடம் இருந்து விருது வாங்கிய சிம்ரன்
முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினிடம் இருந்து விருது வாங்கிய சிம்ரன்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் இருந்து நடிகை சிம்ரன் பவர் ஆப் வுமன் என்ற விருதைப் பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சிம்ரனுக்கு பவர் ஆஃப் வுமன் என்ற விருது சமீபத்தில் அளிக்கப்பட்டது. இந்த விருதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் வழங்க சிம்ரன் பெற்று கொண்டார்.
இதுகுறித்து நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராமில் கூறியபோது, துர்கா ஸ்டாலின் அவர்களிடமிருந்து பவர் ஆப் உமன் என்ற விருதை பெற்றதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. அவருடைய எளிமையான தோற்றம் மற்றும் ஆளுமையை நான் எப்போதும் பார்த்து ரசித்து இருக்கின்றேன். இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.