செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (16:20 IST)

”20 ஆண்டுகள் ஆனாலும் நீ எங்களோடு இருக்கிறாய்”… சிம்ரன் பகிர்ந்த எமோஷனல் tweet!

சிம்ரன் தன்னுடைய தங்கை மோனல் நினைவை ஒட்டி ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியிலும் 2000 தின் தொடக்கத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அவரின் தங்கையான மோனலும் சில தமிழப் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அவர் கடந்த 2002 ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகை சிம்ரன் தங்கையின் நினைவாக ஒரு டீவிட்டை பகிர்ந்துள்ளார். அதில் ‘எங்களோடு நீ இப்போது இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறோம். என்னுள் உன்னுடைய சிறிய பகுதி எப்பொதும் இருக்கிறது. மிஸ் யூ மோனு… எப்போதும்” எனக் கூறி அவரோடு இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.