1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (11:16 IST)

தக்லைஃப் படத்தில் இருந்து விலகும் துல்கர் சல்மான்? அவருக்கு பதில் நடிக்கப் போவது யார்?

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில்  கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த மாதம் செர்பியாவில் ஷூட்டிங் நடந்த நிலையில் இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பல படங்களில் நடித்து வரும் அவரால் தொடர்ச்சியாக இந்த படத்துக்காக தேதிகள் ஒதுக்க முடியாததால் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் நானி இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.