வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 4 அக்டோபர் 2021 (16:02 IST)

போதைப்பொருள் விவகாரம்: ஷாருக்கான் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

நேற்று மும்பையில் உள்ள சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 13 பேர்களில் ஒருவராக கைதாகியுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அக்டோபர் 1 வரை அவரைக் காவலில் எடுத்து விவசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுளது.

மேலும், பாலிவுட்டில் எதிரும் புதிருமாக உள்ள ஷாருக்கான் சல்மான் கான் பொதுவெளியில் அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஆர்யன்கான் விவகாரம் குறித்துப் பேச அவர் ஷாருக்கான் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், ஸ்பெயினில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சல்மான்கான் இந்தியா திரும்பி ஷாருக்கானை சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.