வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (00:35 IST)

சூப்பர் ஸ்டார் மகன் மீதான போதை பொருள் வழக்கு: முக்கிய சாட்சி மரணம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகன் ஆர்யன் கான் மீது பதிவாகியுள்ள போதை பொருள் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாதாகட் தகவல் வெளியாகிறது.

மஹாராஷ்டிர மா நிலம் மும்பையில் கடந்த ஆன்டு அக்டோபரில் ஒரு சொகுசுக் கப்பில் போதை பொருள் பயன்படுத்துவதாக தகவல்  வந்ததை அடுத்து போதை பொருள் கட்டுப்பாடு பிரிவினர் சோதனை நடத்தினர். அதில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் முக்கிய சாட்சி கோசாவி என்பவர்.
இ ந் நிலையில் கோசாவிடம் மெய்க்காப்பாளராக இருந்த பிரபாகர் என்பரையும் சேர்ந்து இருவரையும் தனி நபர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர்.

  வீட்டில் இருந்த பிரபாகருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது அவர் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.