ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (08:07 IST)

திரிஷ்யம் 3 உருவாக்கம்… சஸ்பென்ஸ் குறையாமல் இருக்க புதிய திட்டம்!

மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெளியாகி நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த பாகமும் வெற்றி பெற்று தமிழைத் தவிர பிற மொழிகளில் எல்லாம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் இப்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மூன்றாம் பாகத்தில் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் குறையாமல் இருக்க ஒரு புதிய திட்டத்தை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன்படி திரிஷ்யம் மூன்றாம் பாகத்தை மலையாளம் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக உள்ளதாம். இதனால் ஸ்பாய்லர்கள் மூலம் ரசிகர்கள் கதையை முன்கூட்டியே தெரிந்துகொள்வது இல்லாமல் போகும்.