புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (16:51 IST)

இந்த ஒரு விஷயம் செய்தாலே போதும் பிக்பாஸில் ஜெயிக்க; சூட்சமத்தை சொல்லி கொடுத்த காஜல் - வீடியோ!!

பிக்பாஸ் வீட்டிற்குள் கடந்த வாரம் மட்டும் மூன்று புது போட்டியாளர்கள் வந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஓவியா. அவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் பலர்.  ஆனால் அவரோ நான் இனி அந்த நிகழ்ச்சிக்கு போக மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டார்.

 
இந்த நிலையில் இன்று வந்த புதிய புரொமோவில் காஜல், ஹரிஷ் கல்யாணிடம், ஓவியா பாவம், அவரை ஏன் இப்படி  செய்தீர்கள் என்று இங்கே கேட்டீர்கள் என்றால் அவருடைய கோடி கணக்கான ரசிகர்கள் உங்கள் பக்கம். ஓவியாவிற்கு நிறைய  ரசிகர்கள் இருக்கின்றனர், அவர்களை பிடித்தால் நாம் ஜெயித்துவிடலாம் இவ்வளவுதான் சைகாலஜி என்று கூறுகிறார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்க இந்த ஒரு விஷயம் மட்டும் செய்தால் போதும். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருமுறை பகைத்து கொண்டாலும், வெளியே போனால் உங்களை பச்சைபச்சையாக திட்டுவார்கள். நான் வந்ததிலிருந்தே பகைத்து கொண்டிருக்கிறேன். அதனால வெளியே போனதும் ஒரு வாரத்துக்கு பேஸ்புக் எல்லாவற்றிலும் இருந்து வெளியேறிவிடுவேன்  என்று கூறுகிறார்.