வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (20:45 IST)

விஜய் கட்சி ஆரம்பித்ததால் திமுகவுக்கு பாதிப்பு- செல்லூர் ராஜு

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஜய். இவர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கினார்.
 
மகளிர் தினத்தன்று கட்சியின்  உறுப்பினர் சேர்க்க தொடங்கப்பட்டு,  செயலி மூலம் லட்சக்கணக்கானோர் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியானது.
 
விஜயின் கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளது.
 
இந்த நிலையில், விஜய் கட்சியினர் பற்றி செல்லூர் ராஜூ கூறியதாவது:
 
விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள் 2026 ஆம் ஆண்டு தேர்தல் வரும்போது பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததால் திமுகவுக்குத்தான் பாதிப்பு. ஏனெனில் விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் திமுகவுக்குத்தான் வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததால் அதிமுகவுக்கு கோபம்  என்று தெரிவித்துள்ளார்