மங்காத்தா -2 படம் குறித்து பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவான மங்காத்தா படத்தின் 2 வது பாகம் விரைவில் உருவாகும் என இயக்குநர் அறிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவான திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50 ஆவது படமான மங்காத்தாவை அதுவரை தனது குழுவினரோடு சிறிய படங்களை இயக்கி வந்த வெங்கட்பிரபு பிரம்மாண்டமாக உருவாக்கினார். அப்போது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றளவும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக உள்ளது.
இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெளியான இந்த படம் நேற்று 10 ஆண்டுகளை கடந்துள்ளது.
இந்த மங்காத்தா - 2 ஆம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதுகுறித்து இயக்கு நர் வெங்கட்பிரபு கூறியுள்ளதாவது: மங்காத்தா 2 ஆம் பாகம் விரைவில் உருவாகும் எனவும் முதல் பாகத்தைவிட 2 ஆம் பாகத்தின் திரைக்கதை சிறப்பாக வந்துள்ளது எனவும், இதன் கதையை அஜித்திடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அஜித் 61 படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில், அஜித்62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அடுத்து அஜித்63 படத்தை வெங்கட்பிரபு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.