வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (17:04 IST)

அஜீத் பட இயக்குனர் மர்ம மரணம்....

தமிழ் சினிமா பட இயக்குனர் சிவக்குமார் மரணமடைந்தார்.

 
இயக்குனர் சிவகுமார்(52) பல வருடங்களாக இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். இவர் அஜீத்தை வைத்து ரெட்டை ஜடை வயசு மற்றும் அர்ஜீன், கவுண்டமணி, ரோஜா, ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் ஆயுதபூஜை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் எனக்கூறப்படுகிறது. சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் அவர் தனியாக வசித்து வந்தார்.
 
இந்நிலையில், வீட்டில் நாற்காலியில் அமர்ந்தபடியே இறந்த நிலையில் அவரின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே அவர் இறந்திருக்க வேண்டும் என்பதால் துர்நாற்றம் வீசவே, போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் இறந்த விவகாரம் தெரிய வந்திருக்கிறது.

மாரடைப்பு காரணமாக அவர் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.