’என் மற்ற படங்கள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்… ஆனால் இந்த படம் பிடிக்கும்’- இயக்குனர் ராம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து வருகிறது. இந்த படத்தில் நிறைய விலங்குகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்படுகின்றன.
இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் சமீபத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மறுபடி நீ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதுபற்றி பேசியுள்ள இயக்குனர் ராம் “என்னுடைய மற்ற நான்கு படங்கள் உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் ஏழு மலை ஏழு கடல் படம் உங்களுக்குப் பிடிக்கும். ஏனென்றால் இந்த படம் பேசுவது மானுடத்தின் காதலை எனக் கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.