இன்று ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்படும் இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’!
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து வருகிறது. இந்த படத்தில் நிறைய விலங்குகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்படுகின்றன
இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் முதல் முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று போட்டிப் பிரிவில் இந்த படம் திரையிடப்படுகிறது. அதற்காக படக்குழுவினர் ரோட்டர்டாம் சென்றுள்ளனர். திரைப்பட விழாக்களில் பங்கேற்றபின் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.