செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (10:59 IST)

சன்னி லியோன் கிட்ட பேச முடியல… அதுக்காகவே இந்தி கத்துக்கணும்- இயக்குனர் பேரரசு

நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான பிரபுதேவா மற்றும் சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ள 'பேட்ட ராப்' திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார். 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட இயக்குனர் பேரரசு பேசும் போது “சில வருஷங்களுக்கு முன்னால் இந்தி தெரியாது போடான்னு சொல்லி ட்ரண்ட் பண்ணாங்க. சிலர் அதே வாசகத்த எழுதி டிஷர்ட்டும் போட்டாங்க. அப்ப சந்தோஷமா இருந்தது. ஆனா இப்ப வருத்தமா இருக்கு. என் பக்கத்துல சன்னி லியோ உக்காந்திருந்தாங்க. அவங்க கிட்ட ரெண்டு வார்த்த முடியல. இதுக்காகவே இந்தி கத்துக்கணும்” எனப் பேசியுள்ளார். சமீபகாலமாக பேரரசு பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து இதுபோன்ற கருத்துகளை நகைச்சுவையாகவும் சீரியஸாகவும் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.