1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (10:48 IST)

வரலாறும் அறிவியலும் படித்தாலே போதும்… இயக்குனர் நவீனின் டிவீட்!

இயக்குனர் நவீன் தொடர்ந்து கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவு கொள்கைகளை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தின் மூலமாக பேசி வருகிறார்.

தமிழ் சினிமாவில் மூடர்கூடம் படம் மூலமாக தன்னுடைய முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் நவீன். அதையடுத்து அவர் இப்போது அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னி சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இவர் கடவுள் மறுப்புக் கொள்கைகளையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் பேசி வருகிறார்.

இந்நிலையில் இவரை மடக்கும் விதமாக ஒருவர் ‘தம்பி உங்களை விட பழுத்த நாத்திகர்கள் பெரியார் தாசன், முரசொலி அடியார் அவர்களே பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இஸ்லாத்தை ஏற்றது வரலாறு..அடியாரின் நான் காதலிக்கும் இஸ்லாம் படித்தால் நாத்திகர்களின் அனைத்து கேள்விகளுக்கு விடை கிடைக்கும்...’ என டிவீட் செய்திருந்தார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக ‘நீங்கள் அறிவியலும் வரலாறும் படித்தாலே போதும். இப்போதுள்ள கடவுள்களும் மதங்களும் இந்த பூமி தோன்றுவதற்கு காரணமல்ல என்பது விளங்கும். வரலாற்றை குரானிலும் பைபிலிலும் புராணங்களிலும் தேட கூடாது.’ எனப் பதிலளித்துள்ளார்.