தாடியும், மீசையுமாக அடையாளமின்றி மாறிப்போன சேரன் - நம்பிக்கை பதிவு!
தமிழ் சினிமாவில் எதார்த்தமான திரைப்படங்களை எடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த இயக்குனர் சேரன் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் தொடர் தோல்விகளால் சில ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்து வந்தார். அப்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு வரவே அதை ஏற்று உள்ளே சென்று பல சர்ச்சைகளில் சிக்கினார்.
அதன் பின் வெளியே வந்ததும் அவர் நடிப்பில் உருவான ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகியது. தொடர்ந்து எப்படியாவது தந்தது இரண்டாவது இன்னிங்க்ஸை பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் இருந்து வரும் சேரன் கொரோனா உரடங்கினாள் படவேலைகள் ஏதும் செய்யாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கொரோனா பிரச்னையில் இருந்து சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதால் சேரன் தன் அலுவலகம் சென்று படவேலைகளை செய்ய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
" நீண்ட இடைவெளிக்கு பின் அலுவலகம் வந்து வேலை பார்க்க துவங்கியாச்சு... எவ்வளவு சுகமா இருக்கு.. இத்தனை நாள் முடங்கி கிடந்த நாம் இனி வெளிச்சத்தை நோக்கி நடக்கலாம்.. இது எனக்கு மட்டுமல்ல... எல்லோருக்குமானது. விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவோம் என நம்பி களத்தில் இறங்கலாம்." என நம்பிக்கையூட்டியுள்ளார். இந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிக்ரு தாடியும், மீசையுமாக மாறிப்போன சேரனை பார்த்து அனைவரும் ஷாக்காகி விட்டனர்.