வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2025 (12:39 IST)

சேட்டிலைட் வியாபாரத்தை தக்கவைக்க தில் ராஜு எடுத்த அதிரடி முடிவு!

தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி கேம்சேஞ்சர் படம் ரிலீஸானது. சங்கராந்தியை முன்னிட்டு பெரிய வசூலை அள்ளலாம் என முடிவு செய்து இந்த படத்தை இறக்கினர். ஆனால் படம் பப்படம் ஆனது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்த படம் வசூலில் கோட்டை விட்டு தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டத்தைக் கொடுத்தது.

ஆனால் அதே நேரத்தில் தில் ராஜு தயாரிப்பில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சௌத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சங்கராந்திக்கு வஸ்துனம்’ என்ற படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சக்கைப் போடு போட்டுள்ளது. இந்த படத்தின் லாபத்தின் மூலம் தில் ராஜுவுக்கு கேம்சேஞ்சர் படத்தின் மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம் சரிகட்டப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக திரைப்படங்களை வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்குக் காரணம் படம் ஓடிடியில் ரிலீஸானதும் பலரும் பார்த்துவிடுகிறார்கள். அதனால் தொலைக்காட்சியில் பெரியளவில் பார்வையாளர்கள் கிடைப்பதில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சங்கராந்திக்கு வஸ்துனாம் படத்தை முதலில் தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்துவிட்டு அதன் பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முடிவை தில் ராஜு எடுத்துள்ளாராம்.