செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (16:39 IST)

தில் பச்சேரா படத்தின் வசூல் 950 கோடியா? ரஹ்மான் பகிர்ந்த தகவல்!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான தில் பச்சேரா வெளியான 24 மணிநேரத்தில் 9.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளதாம்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மறைவுக்குப் பிறகு பாலிவுட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அவரது கடைசி திரைப்படமான தில் பச்சேரா கடந்த ஜூலை 24 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இலவசமாக வெளியானது. அனைவரும் வியக்கத்தக்கவைக்கும் விதமாக இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 9.5 பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருவேளை இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இத்தனை பேர் பார்த்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூபாய் என்ற கணக்கில் வைத்தால் கூட 950 கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கும் என அந்த செய்தி கூறுகிறது. இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை அந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனால் ஒரு சிலரோ படம் ஹாட்ஸ்டாரில் இலவசமாகப் பார்க்க கிடைத்ததால் அதிக அளவில் ரசிகர்கள் பார்த்ததாகவும், ஒரு வேளை பணம் கட்டி பார்க்க வேண்டும் என சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு பார்வையாளர்களை ஈர்த்திருக்காது எனவும் சொல்லி வருகின்றனர்.