விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' பட ரிலீஸ் பற்றிய அப்டேட்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கௌதம் மேனன். இவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாயுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.
2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் காரணங்களால் தாமதமானது.
இந்த நிலையில், இப்படம் சம்பத்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளனர். அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள துருவ நட்சத்திரம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.