மிட் நைட்டில் மிரட்டலான செல்ஃபி - இணையத்தில் வைரலாகும் துருவ் விக்ரம்
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
விக்ரம் கதாநாயகனாகவும், துருவ் விக்ரம் வில்லனாகவும் நடிக்க இருக்கும் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவிருப்பதாகவும், முக்கிய வேடங்களில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக துருவ் கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை பெற அவரது அப்பாவை போலவே கடுமையாக முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் மிட் நைட்டில் சட்டை போடாமல் அண்டர் வேர் உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி வருகிறார். இதில் துருவ் பைசெப்களுடன் மிரட்டலான தோற்றத்தில் இருப்பதை கண்டு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.