1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (09:12 IST)

கேரள மக்களுக்கு ரூ.1 கோடி அளித்த தோனி பட ஹீரோ

கேரள மக்களுக்காக ஒரு கோடி ரூபாயை நிவாரண நிதியாக 'தோனி' பட நடிகர் சுஷாந்த் சிங்க ராஜ்புத் அளித்துள்ளார்.

 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பல்வேறு மாநில அரசுகள், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் உதவிகளை செய்து வருகின்றனர்.
 
அந்த வரிசையில், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த சிங் ராஜ்புத், கேரள மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் வேண்டுகளை ஏற்று இதை செய்ததாக சுஷாந்த் சிங் கூறியுள்ளார்.
 
முன்னதாக, கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது முதல் அதுகுறித்து சமூக வலைதளங்களில் சுஷாந்த் சிங் பதிவிட்டு வந்தார். மேலும், அவரது வலைதள கணக்குகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் வரைபடங்களையும் பகிந்து வந்துள்ளார்.