தோனி தயாரிப்பில் தமிழ் திரைப்படம்.. டைட்டில் அறிவிப்பு!
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் அந்த நிறுவனத்தின் பெயர் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்பதும் தெரிந்ததே.
இந்த நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த படத்தின் டைட்டில் சற்று முன் அறிவிக்கப்பட்டது.
எல்ஜிஎம் (LetsGetMarried) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்படப்பாளர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்க இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் பணி புரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
Edited by Mahendran