திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (21:19 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்துகள் கூறிய தோனி!

rajinikanth- dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி,  சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில்  ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நாளை என்பதால் அவரது காமன் டிபிஐ ரசிகர்கள் வெளியிட்டு ரசிகர்களும்,  சினிமாத்துறையினர் மற்றும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த  நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ''தலைவா  ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்'' என்று தெரிவித்து, ரஜினியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.