புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (09:34 IST)

டாப் போட்டியாளர் யார்? தர்ஷனுக்கு குவியும் ஆதரவு

பிக்பாஸ் போட்டியாளர்களில் இதுவரை நியாயமாக நடந்து கொண்டு, டாஸ்குகளை சரியாக செய்து யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் மனதில் தோன்றியதை பேசி வரும் ஒருசிலரில் தர்ஷனும் ஒருவர். அவர் இந்த டைட்டிலை கைப்பற்றும் அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார் என்பதே பார்வையாளர்களின் கணிப்பாக உள்ளது
 
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில், பிக்பாஸ் போட்டியாளர்களில் டாப் 3 போட்டியாளர்கள் யார்? என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு பதிலளித்த கவின், அபிராமி ஆகிய இருவரும் தர்ஷன் பெயரைத்தான் முதலில் கூறுகின்றனர். மற்ற போட்டியாளர்களும் தர்ஷன் பெயரை கூற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் கவின், தர்ஷனை மட்டுமின்றி லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர்களின் பெயர்களையும் கூறுகின்றார். தன்னை காதலித்து வரும் சாக்சியை அவர் கிட்டத்தட்ட மறந்தேவிட்டது பெரும் ஆச்சரியத்தை அளிக்கின்றது. அதுமட்டுமின்றி லாஸ்லியாவின் பெயரை அவர் கூறியதும் நிச்சயம் சாக்சி உள்பட ஒருசிலரை நிச்சயம் கடுப்பேற்றியிருக்கும்
 
ஏற்கனவே கவினை அவ்வப்போது கஸ்தூரி டார்கெட் செய்து வரும் நிலையில் தற்போதுதான் கவின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். லாஸ்லியா பெயரை கவின் கூறியதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா? என்பது போக போகத்தெரியும்