புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (22:33 IST)

பிக்பாஸ் இந்த வாரம் வெளியேறுகிறார் சாக்சி: கவினுக்கு திண்டாட்டமா? கொண்டாட்டமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சாக்சி வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சாக்சி கடந்த சில வாரங்களாக வெளியேறும் நிலையில் இருந்தவர். ஆனால் நூலிழையில் தப்பித்து வந்தார். இந்த வாரம் வகையாக சிக்கிக் கொண்டதால் அவர் வெளியேறுகிறார் 
 
பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு சொந்தக்காரர் சாக்சி. கவின், லாஸ்லியா நட்பை கொச்சைப்படுத்தியது மட்டுமன்றி கவினை பயங்கரமாக டார்ச்சர் செய்தவர் சாக்சி. கவினை மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் அனைவரையும் அவர் விட்டுவைக்கவில்லை. எனவே அவர் மீது கடுப்பாகி வந்த பார்வையாளர்கள் அவரை வெளியேற்றும் முடிவை எடுத்து அவருக்கு குறைவான வாக்குகளை அளித்து வந்தனர் 
ஆனால் மீராமிதுன் வாண்ட்டட் ஆக வந்து சிக்கிக் கொண்டதால் அவர் முதலில் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடைந்து பிக் பாஸ் முயற்சியால் மீண்டும் சாக்சி காப்பாற்றப்பட்டு ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். ஆனால் ஒரு அளவுக்கு மேல் பிக்பாஸால் கூட சாக்சியை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த வாரம் சாக்சன் வெளியேறுகிறார் 
 
சாக்சி வெளியேறுவதால் பெரிய நிம்மதி அனேகமாக கவினுக்குத்தான் இருக்கும். கவின், லாஸ்லிஆ  உறவு இனிமேல் எப்படி செல்லும்? அந்த உறவை நீட்டிக்க கஸ்தூரி விடுவாரா? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இப்போதைக்கு ஒரு சிறு ஆறுதலாக சாக்சி வெளியேறுவது கவினுக்கு இருக்கும் என்பது மட்டும் உண்மை