ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:15 IST)

மனக்கசப்பை மறந்து மேனேஜருக்கு தனுஷ் செய்யும் உதவி… விரைவில் அறிவிப்பு!

நடிகர் தனுஷ் தனது முன்னாள் மேனேஜர் வினோத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.

நடிகர் தனுஷ்தான் இன்றைய சூழ்நிலையில் அதிகமான படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகர். வரிசையாக படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கும் தனுஷ் தனது முன்னாள் மேனேஜர் வினோத் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

வினோத்தான் தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தைக் கவனித்து வந்தார். அதில் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் இப்போது இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு நீங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு கதையை தனுஷே எழுதியுள்ளதாகவும் செல்வராகவன் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என தனுஷ் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.