ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (08:07 IST)

செல்வராகவன் என்னை செஞ்ச டார்ச்சருக்கு இந்த படத்தில் பழிவாங்கிவிட்டேன் – தனுஷ் ஜாலி பேச்சு!

தனுஷ், தனது 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், இயக்குனர் செல்வராகவன்தான் தன்னுடைய குரு என்று தெரிவித்துள்ளார்.

அவர் பேச்சில் “இயக்குனரும், என் அண்ணணுமான செல்வராகவன்தான் நான் இங்கு இருக்கக் காரணம். அவர்தான் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். எனக்குக் கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்தார். சாப்பிட சொல்லிக் கொடுத்தார். கண்ணம்மா பேட்டையில் ஒரு குடிசையில் இருந்தவனை போயஸ் கார்டனில் கொண்டு போய் வைத்தவர் அவர்தான். இந்த படத்தில் மற்றவர்களுக்கு இரண்டாவது டேக் வந்தால் நான் கோபப்படுவேன். ஆனால் செல்வராகவனுக்கு இரண்டாவது டேக் என்றால் மட்டும் நான் சந்தோஷமாகிவிடுவேன். ஏனென்றால் என்னை அவர் அந்த அளவுக்கு டார்ச்சர் செய்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.