வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2021 (17:12 IST)

தனுஷின் ’ஜகமே தந்திரம் 'படம் ஒடிடியில் ரிலீஸ் ! இயக்குநர் டுவீட்

தனுஷின் ஜகமே தந்திரம் படம் ஒடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இயக்குநர் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏலே திரைபடத் தயாரிப்பாளர், இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி 30 நாட்களுக்குப் பிறகுதான் ஒடியில் ரிலிசாகும் என்ற கடிதம் கொடுக்காமல் விட்டுவிட்டார். இக்கடிதம்கொடுத்தால்தான் ஏலே படம் தியேட்டரில் ரிலீஸாகும் எனத் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர் இதனால் தயாரிப்பாளர் தரப்புக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது.

ஏலே படம் பிப்.,12 தேதி ரிலீசாக இருந்த இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கைவெளியிட்டது.

ஏற்கனவே புலிக்குத்திப் பாண்டி, நாங்க ரொம்ப பிஸி ஆகிய படங்கள் நேரடியாகத் தொலைக்காட்சியில் ரிலீஸானது.

இந்நிலையில்,ஏலே படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்தான் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தையும் தயாரித்துள்ளார்.

இப்படத்தை ஏற்கனவே ஒடிடியில் வெளியாவதாகச் செய்திகள் வெளியானது. அப்போது தியேட்டர் அதிபர்கள் இப்படம் தியேட்டர்களில் வெளியாக வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். தனுஷின் ரசிகர்கள்,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் இதைத்தான் விரும்பினர். இந்நிலையில் ஜகமே தந்திரம் படத் தயாரிப்பாளர் இப்படத்தை ஒடிடியில் அதிகத்தொகைக்கு விற்றுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படம், ஒடிடியில் ரிலீஸாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இப்படம் படக்குழுவினரின் இதயம் மற்றும் கடின உழைப்பால் உருவாகியுள்ளது. இப்படம் உலகமெங்கும் 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது எனத்தெரிவித்துள்ளார். அத்துடன் இப்படத்தின் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், கார்த்திக்சுப்புராஜ் மற்றும் ரசிகர்கள் தியேட்டரில் இப்படம் வெளியாக ஆர்வம் காட்டினாலும் தயாரிப்பாளர் இம்முடிவு எடுக்க தியேட்டர் அதிபர்கள் கொடுத்த அழுத்தமே காரணம் எனத் தெரிகிறது.