புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2020 (19:16 IST)

சர்வதேச அளவில் சாதனை படைத்த தனுஷ் பாடல் - சிலிர்ப்பூட்டும் வீடியோ!

தனுஷின் பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் மாரி. இந்த படத்தில் இடம்பெற்ற தீம் பாடலான  தர லோக்கல் பாடலை சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சியான காட் டேலன்ட் என்ற ஷோவில்  மும்பையைச் சேர்ந்த X1X என்ற நடன குழுவினர் பிரம்மிப்பூட்டும் வகையில் Performance செய்து அசத்தியுள்ளனர்.

நிகழ்ச்சியின் செமி ஃபைனல் ஷோவில் பங்கேற்ற இந்த நடனம் நிகழ்ச்சி நடுவர்களையே மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. அனைவரும் எழுந்து நின்று நடன கலைஞர்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர். தென்னிந்திய சினிமா நடிகர் தனுஷின் பாடலுக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பை சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதோ அந்த வீடியோ...