ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (18:40 IST)

தனுஷின் ‘ராயன்’சிங்கிள் பாடல்.. ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

தனுஷ் நடித்து இயக்கிய ‘ராயன்’சிங்கிள் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மேலும் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டதோடு இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் அடங்காத அசுரன் என்ற இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பதும் தனுஷ் மற்றும் ஏ ஆர் ரகுமான் இந்த பாடலை பாடி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இது குறித்த போஸ்டரில் ஜூன் 13ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
 
 தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Mahendran