1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (21:26 IST)

கர்நாடகாவில் 'காலா'! நீதிமன்றத்தை நாடிய தனுஷ்

கர்நாடக மாநிலத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ள நிலையில் அந்த மாநிலத்தில் 'காலா' வெளியாவது சந்தேகம் என்று கூறப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் 'காலா' படத்தை வெளியிடுவது குறித்த பிரச்சனையில் அரசு தலையிடாது என்றும் கன்னட மக்கள் 'காலா' படம் திரையிடுவதை விரும்பவில்லை என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் கர்நாடகாவில் காலா" படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 'காலா' பட வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர்  மனு அளித்துள்ளார். இந்த மனுவில் 'ரஜினிகாந்த் கூறிய  சமூக விரோதிகள் அவரது படமான 'காலா' படம் வெளியாகும் திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும், இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்றும் எனவே, "காலா" படம் திரையிடப்படுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.