வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (07:57 IST)

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பற்றி தனுஷின் விமர்சனம்!

2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி உள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படம் 1975களில்  நடப்பதாக உருவாக்கப் பட்டுள்ளது.. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளியை முன்னிட்டு இன்று ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் படத்தை பாராட்டி பதிவு செய்துள்ளார். அதில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு. வழக்கம் போலவே அசத்தியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா சார். லாரன்ஸ் மாஸ்டர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசை அற்புதமாக அமைந்துள்ளது. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் ரசிகர்களின் இதயங்களை கவரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.